உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

வெயில் பூக்கும் சுவரின் வாசம்


 *
பேசிய வார்த்தையில் வழிந்து இறங்குகிறது
பெருமழை
சுவரின் ஈரத்தால் வெயிலை அனுமதிக்காத பேச்சு
கோடையை மழைகொண்டு பூசும்
பருவமாற்றம்
இருள் அறையில் விளக்கேற்றுவதாய்
நிராகரிப்பு
நிழல் திரிபிடித்தாட பெரிதாகும் தோற்றம்
பிழைகூடி நிறுத்தும் பொய்யில்
கரியாகி புகைகிறது
இறுதிச் சொல்லின் வெளிச்சம்

-ரேவா

painting : Marianne Harton

0 கருத்துகள்: