உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

பருகுதலில் கைவிடப்படுதல்இதழ் பொருத்தி சூடேற்றிக்கொண்ட பின்
தனித்து விடப்படும் நிமிடங்கள் 
குரூரமானவை

கைவிடப்பட்ட முத்தம்
காற்றில் கரைந்து வெறுமையாய் நீள

உள்ளுக்குள் தகிக்கும் வெப்பம்
உக்கிரமாய் எழுப்பும் அடிவயிற்று இரைச்சலாகி

சத்தமாய் பேசும் வெற்றுக்கோப்பையை
சலனமே இன்றி கழுவி வைக்கிறாய்
அடுத்த வேளை தேனீருக்காய்-ரேவா

0 கருத்துகள்: