உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

முயங்கும் பொழுதின் தீராத் தாகம்காலிக் குடத்தைச் சுமந்து வரும்
இடையைப் போல்
எளிதாகவே இருக்கிறாய்

காற்று நிரம்பி வழியும் அதனுள்
செவி நுழைக்க
கடல் அலை காதைத் தீண்டும் சத்தம்
கொடுக்கிறது
உப்புக்காற்றோடு உன் ஈர முத்ததை

பின்
நிரம்பி வழிய எடுத்துத் தருகிறாய்
அனுபவ இடையில் நடனமிடும் இசை
முயங்கும் உனதன்பின்
கவிதைகளாய் தாகம் தீர்க்கிறது

-ரேவா


0 கருத்துகள்: