*
சொல்லொன்றால் தவறிவிழும் போது
தாங்கிப் பிடிக்கிற உதடுகள்
இரண்டென பிரிக்கிறது
உச்சரித்த பாதைகளை
நம்பிக்கையில் நுழைந்துகொள்கிற வழி
தர்க்கத்திற்குரியதாய் இல்லாது போனது
ஒருவகையான ஏற்பு
இன்னொருவகையான ஏமாற்றம்
எழுந்துகொள்கிற ஏற்பில் முளைக்கிற சத்தம்
வியாபிக்கிறது
பறந்தலைவதற்கான வாய்ப்பை
சிறகுகள் அனுமதிக்கிறது
பறப்பதற்கான வானத்தை
தூரம் தொலைத்திடும் தொடக்கத்தை
ஏற்றுக்கொள்ளும் இடம்
ஒப்பனைக்குரிய அறையென மாறும் பொழுது
எதுவொன்றையும் அனுமதிக்கிற நிறம்
நம்பவைக்கிறது
நிறக்குருடின் சுகவீனத்தை
நாம் ப்ரியத்திற்கு அப்பாலிருக்கிறோம்
சொல்லின்றின் வளைவுகளில்
யாரும் முந்தாதீர்
-ரேவா
தர்க்கத்திற்குரியதாய் இல்லாது போனது
ஒருவகையான ஏற்பு
இன்னொருவகையான ஏமாற்றம்
எழுந்துகொள்கிற ஏற்பில் முளைக்கிற சத்தம்
வியாபிக்கிறது
பறந்தலைவதற்கான வாய்ப்பை
சிறகுகள் அனுமதிக்கிறது
பறப்பதற்கான வானத்தை
தூரம் தொலைத்திடும் தொடக்கத்தை
ஏற்றுக்கொள்ளும் இடம்
ஒப்பனைக்குரிய அறையென மாறும் பொழுது
எதுவொன்றையும் அனுமதிக்கிற நிறம்
நம்பவைக்கிறது
நிறக்குருடின் சுகவீனத்தை
நாம் ப்ரியத்திற்கு அப்பாலிருக்கிறோம்
சொல்லின்றின் வளைவுகளில்
யாரும் முந்தாதீர்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக