இரவு நேரங்களுக்கு செவிகொடுப்பது என்பது நிறைமாத கருவின் அசைவிற்கு மகிழும் தாயின் மனதைப் போன்றது..
எந்தவொன்றும் அதன் தொடக்கத்தை தொலைக்கும் போது மேலும் இறுகிக்கொள்கிறது, அதற்கு நேரெதிரென்றால் இலகுவாகிறது. அது போலவே இரவின் குரலும். மிகச்சிறந்த பேச்சாளன் ஊமை என்று படித்தது இரவின் குரலை வேறொரு விதமாய் செவிக்கு கொண்டு வருகிறது.
இங்கே மாடியில் காலாற நடந்து திரியும் இந்த நேரம், ஆளற்ற வானம் அடைகாக்கிறது அடைபட்டுகிடக்கிற யாவற்றையும் என்ற யோசனையை வளர்த்துக் கொடுக்கையில், மார்கழி மாத பஜனைப் பாடல்களும், தூரத்தில் பழுத்த கிழவியின் ஒப்பாரிப்பாடலும் காற்றில் கலந்து நிஜத்தை உறைய செய்கிறது..

இருப்பிற்கும் இருப்பின்மைக்குமான தொலைவு, இருளின் குரல் வெளிச்சம். அதன்
சப்தங்கள் காதுகளற்றவன் கேட்டறியாத பாடல்.அதன் விடியல் அந்திக்கு
செலுத்தும் இன்னொரு நன்றி..
இரவின் குரல் தாயின் தாலாட்டு..
-ரேவா
இரவின் குரல் தாயின் தாலாட்டு..
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக