*
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
எப்போதும் ஏதோ ஒரு மனநிலைக்கு ஒத்துப் போகிற இல்லை
ஏதோ ஒன்றில் நம்மை பார்க்கத் தருகிற கண்ணாடி முகம் பாரதியின் எழுத்து..
எழுந்துகொள்வதை மீறி அந்த நிமிடத்தில் முளைத்திடும் உத்வேகம் நம்மை என்னவாய் செய்கிறது என்பது ஒரு நீண்ட பயணத்தின் பாடம்...
அந்த பயணத்தில் இலக்குகளைத் தேடுவதும், இல்லை அந்த பயணமே ஒரு இலக்கற்றதின் இலக்காய் மாறுவதும் நம் கைமணல்..
கட்டிடங்கள் நம் உயரம்..
பிடித்தவர்களோடு பேசிக்கொண்டிருந்த நிமிடத்தில் அறுந்துபோன அழைப்பில், ஏறிக்கொண்ட பாரதியின் இந்த வரி என்னை ஏன் இந்த சுடும்வெயில் மனதை தீக்குள் விரலை வைத்து நின்னைத் தீண்டும் இன்பதிற்கு ஒப்பாய் எண்ணச் சொல்கிறது..
எதையும் யோசிப்பதைத் தாண்டி மனம் ஆடிப்பார்க்கும் பல்லாங்குழி ஆட்டத்தில் நிறைவது யாரின் குழி? தொலைவது யாருடைய ஆட்டத்தின் காய்கள்..
ஒன்றிற்குள் தொலைகிற இன்னொன்று...
ஒன்றுமற்றது என்ற இடத்திலிருந்து யோசிக்கையில் இருக்கிற அன்பின் வெளிச்சமும், கிடைக்கிற வெளிச்சத்தை ஒன்றுமற்றதாய் செய்திடும் மாய அன்பும், சிக்கலுக்குள் தேட நினைப்பது தெளிவற்றதின் ஒளியையா? இல்லை ஒளியின் தெளிவற்றதையா?
சுடும் அன்பு ஓர் உன்மத்தம் என்றே கத்தத்தோன்றுகிறது.. அதில் சுடர்விடும் எதுவும் அனுமதித்தல் என்ற திரித்தூண்டலின் ஆட்டம்..
தீர்தல் என்பது கருணை..
பெரும் பித்தில் கொண்டு போய் விடும் எந்த ஒரு பழக்கத்தையும் விட்டொழித்தல் என்பது எத்தனை சவால் நிறைந்தது..
மாற்றம் ஒன்றே சாஸ்வதம் என்பதை வலியுணர்ந்து அறிகிற கலை அறிவிற்கு புரிகிறதே அன்றி மனதிற்கு?
ஒரு கேள்விக்குள் குவிகிற பணிவை நிமிர்த்தி கொண்டு வர மேற்க்கொள்ளும் பார்வையின் பயணம் ஆச்சர்யம்..
அது ஒரு இலக்கு அல்லது விரிகிற இலக்கற்ற என்ற சொல்லில் இருக்கும் திசையறியா வழி..
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காலத்திற்கும் தீராத ஆண்ணென்றால் இப்போதும் எனக்கு பாரதி மட்டும் தான் நினைவில் வருகிறான்..
மனம் இன்னொருமுறை இந்த பாடலைக் கேட்கத்தூண்டுகிறது எனக்குப் பிடித்த உன்னிகிருஷ்ணனின் குரலில்?!..
-ரேவா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக