உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 12 ஜனவரி, 2016

நிஜத்தின் இருண்மை நிழல்


*
நிழல் தவறிடும் போது
நிஜம்
அதள பாதாளம்


ஆளற்ற ஊரில்
நடப்பவர்க்கே எல்லைகள்
அது
பயணங்கள் மீது சுமத்தும் பலிக்கு
பக்குவத்தின் வயது


திரும்புதல் இலக்கென்ற போதும்
தீர்ந்திடும் நிழல்
நிஜத்தின் இன்னொரு கரை


தீராத மற்றொரு கரை
தீர்த்துவைக்கட்டும்
அகப்படாத இருண்மையின் வெளிச்சத்தை


நீயுன் கைவிளக்கைத் துடைத்து வை.

-ரேவா



0 கருத்துகள்: