*
குரல் வழி உருண்டோடுகிறது காலம்
அவ்வளவு காதலாய்
அவ்வளவு கதகதப்பாய்
ஓவியக் கைகளாகி தீட்டுகிற சித்திரம்
குரல் போல்
அத்தனை இனிமை
அத்தனை ஆழம்
தீண்டுவதின் பொருள் திகட்டத் தொடங்குவதில்லை
உன் குரல் இரண்டடிக் குறள்
அதிகாரங்கள் நீங்கலாக
நீந்துகிற நதி
உன் குரல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக