*
விபத்திலிருந்து தலைத்தப்பும் படியான
ஈரத்தோடு வருகிறாய்
நுழைவதற்கான வழியாகிறது பிறவித் தவறு
திருத்தங்களைத் தேடும் காரணத்திற்கு
கைவிலங்கிடுகிற கழிவிரக்கம்
கை நகங்களை வெட்டிவிடச் சொல்கிற தண்டனை
ஒரு நகப்பூச்சு
பொருந்தா நிறங்களில் வளைகின்ற தூரங்கள்
வார்க்கிற வண்ணம்
மழைக்கான வானவில்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக