*
சப்தங்களற்றுப் போய்விடுகிற அறை மாட்டி வைத்திருக்கிறது வண்ண வண்ண நினைவுகளை சம்பவங்களாய்
புரிவதில் புரியாது போய்விடும் புதுமொழியை நா பிறழ உச்சரிக்கையில் லயம் தப்புகிறது உதடுகளுக்கு
நிற ஸ்சேடுகளின் குழப்பத்தை ஒப்பனை செய்வதின் ஒப்பனைக்குள் மறைத்துக்கொள்கிறது பிறவிப் பழக்கம்
ஏற்றது எதுவென்ற குழப்பம் எதிரொலிக்கிறது எல்லா கண்ணாடியிலும்
அதுவரை புரியாத பாதரசப் பொழுதுகள் சப்தத்தின் குரல்வளைத் திருகி உருண்டோடுகிறது ஒவ்வொரு பிம்பமாக
0 கருத்துகள்:
கருத்துரையிடுக