*
தலைக்கு மேல் கொளுத்தும் நிலவு
கால் வைக்க அச்சமூட்டுகிறது
கீழ் விழும் நிழலின் மீது
வெப்பமானிகள் கொண்டு அளக்கும்
அவசியங்களைத் தரவில்லை சுவற்றின் நிழல்
அது விழுந்து சுமக்கிறது
நிழலின் நிழலை
அசைவற்றைவை அணைத்திடும்
எளிய நிமிடத்தின் மீது ஏறிக் கொள்கிறது
ஓர் இரவும்
இரவின் நிழலும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக