*
நின்று பேசுகிறாய்
பட்டாம்பூச்சியின் வண்ணங்களைப் பூசிச்சிரிக்கிறது
அந்தி நேரம்
கையசைத்துப் பிரிந்ததும் வளரத் தொடங்கிவிடும்
கனவுகள் வானவில்லை வானமாக்கிடும் விந்தை
இன்னும் புரிவதில்லை
நீண்ட கூடு நம்மை அடைக்காக்கிற உணர்வு
போதுமானதாகிறது
அடைபட்டுக்கிடக்கிற அத்தனையிலிருந்தும் வெளிவர
இலகுவாக்கிவிட்டுப் பறக்கவிடும்
உரையாடலிருந்து வளரத் தொடங்கும் சிறகுகளை
சிறுமியின் ஓவியக் கைகளாக்கிப் பரிசளிக்கிறேன்
சூரியன் ஒன்றை வரைந்து
அதற்கு செருப்பு அணிவிக்கிற மனம் தான்
நேசமென புரியும் வரை
சிறுமியின் ஓவியக் கைகள் வரையட்டும்
வண்ணங்களுக்கான சிறகுகளை
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக