*
மெளனத்தைப் புரிந்துகொள்ள நிர்ப்பந்திக்கிறாய்
எல்லா வார்த்தைகளையும் பிரயோகித்து
தலையசைவில் விளங்கிக் கொள்ளும் ஒப்புதலை பக்குவமென்று சொல்லித் தொங்கவிடும் டேக்கில் பெருவிரல் முத்திரையை ஆவணமாக்குகிறது நிதானம்
சரியான நேரத்தில் பதிவாகும் வரவில் திறந்து கொள்கிற திசையை நடப்பதற்குரிய வழியாக்கிக் கொள்கிறது நடந்து பார்த்த வாதங்கள்
அதுவரை இழையோடிய பிழைகள் மெல்லக் குதித்துச் சலனிக்கிறன வளைவுகளாய்
-ரேவா
நன்றி
கணையாழி (பொன்விழா ஆண்டு) ஜூலை 2015
0 கருத்துகள்:
கருத்துரையிடுக