உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

மழைக் கோடை




*

ஒரு மழைக்கால ஈரத் தரையென சில்லிடுகிறாய்

நிற்கும் பாதமேறி உச்சி பிடுங்குகிற குளிர்சொல் ஜன்னலோர கண்களென போர்த்தக் கொடுக்கிறது துளி நினைவை

கைகளில் தவழ்ந்திடும் சுவை வளர்த்தெடுக்கிற ஆதிமுத்தத்தின் எச்சில் கனவு மழையைப் போல் இனித்துக் கிடக்கிறது

முகமேந்தி பார்க்கிற வானம் உதடு நனைய அனுப்பும் ஏதோ ஒரு துளியில் பிரியத்தின் பெயர்

வயிறு நிறைகிற மண் வாசம் கிளர்ந்தெழுப்புகிற புள்ளி நியூரானின் பிரம்மாண்டம்
 
மழைக்காலங்கள் கோடைக்குத் திரும்புவதில் சம்மதங்கள் இல்லை ஆயினும் அமிலமென துளைக்கிறது நனைதலின் சூடு

0 கருத்துகள்: