*
விட்டுவிலகும் படி இல்லை உன் தந்திரம்
விளக்குப்பிடித்துக் காத்திருத்த வார்த்தைகளில் சேரா வெளிச்சம் விட்டிலென பறக்கிறது எரியும் தனிமைக்கு மேல்
நிழலாக அசையும் சொற்ப வெளிச்சத்தில் பெரிதாகும் தோற்றம் மொய்க்கிறது வெறுமையை
கரையும் ஒளி வளரத் தொடங்கும் இருள் தாண்டுவது போலொரு தண்டித்தல்
நீளும் ரகசியங்களின்
புகைவண்டியாக குரல் கக்கி எழுப்புகிறது நடுச்சாம இருப்பை
நீயோ முடியாமலே இருக்கிறாய் தண்டவாளம் உன் தந்திரங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக