உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

ரசமிழக்கா சொல்லின் அசைவு



*
ஒரு தற்காலிகம் தகவமைத்துக் கொள்கிறது 
தனக்கான நிரந்தரக் கூடாரத்தை


வெயிலின் வெட்கை
கூடார நிழலின் வியர்வையெனப் பூக்கிறது
உப்பில்லா நாவில் உச்சரிக்கத் தயங்காத  
முதுகெலும்பற்ற சொல்லின் மலர்தல்  
நாரின் சூட்சுமத்தோடு மணக்கிறது
மாலையாகி

இருப்பதில் சேர்ந்திடும் ஈரம்
தொலைப்பதில் கண்டெடுக்கப்படும்  
கானலின் மாயைக்குள் மறைந்துகொள்கிறது

நகர்தலில் உருவாகும் சொல்லின் புதிய பாதை
திறந்துவிடுகிறது
அனுமதிப்பின் ஆளுயரக் கண்ணாடி பிம்பத்தை

இனி
உன் அசைவு
என் அசைவு

ஒரு தற்காலிகம் தகவமைத்துத் தருகிறது
தனக்கான நிரந்தரக் கூடாரத்தை
 

 

0 கருத்துகள்: