*
பிடி சாம்பலின் அளவொன்றை சுமந்திருக்கிற உடல் அத்தனை அந்தரங்கங்களையும் காற்றில் பறக்கவிட்டு அலைகிறது
ஒரு சொல்லின் வழி இறங்குகிற வானம்
கதவடைக்கிறது மழைக்கான வானவில்லை
எதை நோக்கியும் நகர்வற்ற நிலம்
சேமிக்கிறது தடங்களின் வருகையற்ற உலர் ஈரத்தை
நீர்மைப் பொழுதின் குரல் தடம்
சுட்டெரிக்கிறது வாழ்வாதாரமற்ற களர் பிரியத்தின்
விதை நெல்லை
விதைக்கத் தெரியா பார்வையின் முதல் பிழை
இந்த களை
பிடுங்கி எறிதல் சாத்தியமில்லையென்ற போதும்
பிடி சாம்பல் தந்து போகிறது
நிச்சயமற்ற வாழ்வில் நிச்சயிக்கப்பட்ட மரணத்தை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக