எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாய் இருக்கிறது இந்த மெளனம்
கோபம் கொட்டித் தீர்த்த சொல்லில் கிளிஞ்சல் பொறுக்குகிற மனம் கடல் ஆழம்
அலை திருப்பிவிடுகிறது அதன் முகமற்றதை
அனுமதிக்கிற கரை கை அழைத்துப் போகும் தூரம் நங்கூரம்
கிளம்புதல் குறித்த பாதையறியா பதிலொன்றில் முளைக்கிற கேள்விக்குள் பவளப் பாறை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக