*
உணர்வதற்கும் உணர்த்துவதற்குமான காலஅளவு நீட்டிக்கிறது தொடர் நிகழ்வை
தேர்ச்சிகள் குறித்தான அறிவிப்பு வேண்டும் தொடர்ச்சியில் கற்ற பாடத்தின் வரைபடம் கடப்பதற்கான மீதி வாய்ப்பு
தொலைகிறோம் வட்டங்களுக்குள்ளே
வகைபடுத்திக் கொண்ட வாய்ப்பின் நேர்த்தியின்மை இழுத்துவருகிறது ஆரம்பங்களின் அறிவின்மைக்குள்
தோல்வியில் கண்டெடுக்கும் வலி குறிப்பெடுக்கிற புதிய வழியில் உணர்வற்ற தீவு
நாற்பக்கம் சூழ்ந்திருக்கும் கடல் ஈரமற்ற நிகழ்வின் தோல்விக்கான முரண்
ஒரு தொடர் நிகழ்வின் தேர்ச்சியின்மை காட்டிக்கொடுக்கிறது வெற்றிக்கான கால அளவை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக