*
எதிர்பார்ப்பு எடுத்து தந்துவிடுகிறது தனது முகத்தை
ஒப்படைத்தலெனும் நிராயுதத்தை
உணர நேருகிற தருணம் வாதாடுகிறது
பலகீனங்களை முன்வைத்து
அவரவர் காரணம் பத்திரப்படுத்துகிறது
உயிர்வாழ்தலுக்கான குறைந்தபட்ச நம்பிக்கையை
விடுபடல்
விட்டுப்பிரிதலென
இரண்டுக்குமான சமாதானப் புறாக்கள்
தன் ஜோடிவிட்டு பிற ஜோடியோடு உறவுகொள்வதில்லை
எளியவொன்றின் எட்டாக்கனிகளை
எட்டிப்பிடிப்பதில் சலிக்கத்தொடங்குகிற எதுவொன்றையும்
மறுதலிக்கிற தொலைவு கூட்டிவருகிறது
ஆயுதங்களோடான எதிர்பார்ப்பின் எதிர்ப்பை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக