பச்சை நரம்பில் பாயும் ரத்தமென இருக்கிறது
இந்த இரவு
கதை கேட்பதற்கு நிமிட முள்
செவிகளைத் திறந்தே வைத்து
இளஞ்சூட்டின் ப்ரியம் பூத்த
அந்த கணத்தை மட்டும் திருப்பிக் கொடு
சொற்களின் மெளனமும்
இதயத்தின் நிமிட ஓசையும் இம்சிக்காதபடி
இந்த இரவோடு கதை பேச வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக