* முடியும் என்பதை முடியாததிலிருந்து தொடர்கிறேன்
முதல் அ அறியாமலே
இப்போது அறியாததும் முடியாதது ஆகிறது முடியும் என்பதைப் போல்
தொலைக்கிற ஒற்றைக் காலின் பின் தொடரும் சொற்பத்தை இருக்கிற இரண்டு காலுக்கடியில் புதைக்கிறேன்
முளைக்கிறது முடியாதது முன்னேறுகிறது முடியும் என்பது
மனம் கிளைத்து வெளிவரும் முன் முடியுமென்பது முடியாததாகவே
இப்போது ஃ அச்சுப்பிசகாமல்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக