நீலவானத்தின் நிலா தீனியாகிறது
தனித்து விடப்பட்ட அத்தனை பார்வைக்கும்
நம்பத்தொடங்கையில் நகரத் தொடங்குவதை
வழித்துணையாக்கிக் கொள்கிறோம்
வளர்பிறைகள் போல் தேய்பிறைகள்
அத்தனை
சுகந்தமாய் இருப்பதில்லை
இல்லாமல் இருப்பதும்
இருந்தும் இல்லாததில் இருப்பதுமாய்
இருக்கத் தொடங்குகிறோம்
நீலவானையும் நிலவையும் போல
0 கருத்துகள்:
கருத்துரையிடுக