உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

நீலத்தில் விரியும் சுழற்சி



*
நீலவானத்தின் நிலா தீனியாகிறது 
தனித்து விடப்பட்ட அத்தனை பார்வைக்கும்


நம்பத்தொடங்கையில்  நகரத் தொடங்குவதை  
வழித்துணையாக்கிக் கொள்கிறோம்
 
வளர்பிறைகள் போல் தேய்பிறைகள்  
அத்தனை சுகந்தமாய் இருப்பதில்லை

இல்லாமல் இருப்பதும் 
 இருந்தும் இல்லாததில் இருப்பதுமாய்  
இருக்கத் தொடங்குகிறோம்  
நீலவானையும் நிலவையும் போல


 

0 கருத்துகள்: