*
ஒரு கொலைக்கான தீவிரம்
கூர் தீட்டப்படுகிறது பார்வையில்
நீ புன்னகைக்காமலே இருந்திருக்கலாம்
புறமுதுகேந்தும் வீரச்சாவு
இப்போதெல்லாம் பிடிப்பதில்லை
நட்பிலிருந்தே தொடங்கிவிடுகிற பிழைகளை
அகராதிகளை கரைத்துக் குடித்ததைப் போல்
பாசாங்கு செய்யும் மொழி பேதம்
ஊமைக் கனவின்
உள் நாவசைவைக் கவனிக்கப்போவதில்லை
ஒரு கொலை தன்னை தற்கொலை செய்துகொள்ளத் துடிப்பதை
பார்க்காமலே கடந்து போ
இருட்டென இறங்குகிற வெளிச்சம்
சிலுவை சுமக்கிறது நினைவுகளை
முதல் ஆணி இறங்குகிறது
நிராகரிப்பின் நாடி நரம்பெங்கும்
பதில் புன்னகையெனும் முட்கீரிடம் அலங்கரிக்கட்டும்
உன் அரசவையை
மீண்டெழுதலைச் சாத்தியமாக்கா சாத்தானாய்
என்னுள் இறங்கு என் தேவனே
0 கருத்துகள்:
கருத்துரையிடுக