*
தினசரிகள் தீர்ந்துபோகும்படி தகவமைக்கிறது தற்காலிகங்களை
அவசர சொல்லின் பிறழ்தல்
கூடுபாயும் கணத்தில் பிறக்கிறது
நொடியிழை அறுந்த நிதானம்
தத்தம் கூடு திரும்பும் அவசரம்
விட்டுப் பறக்கிறது
அடைகாத்த வெம்மையின் சூட்டை
சாம்பல் நிற பறவையின் இறகுகள் எழுதிப்பார்க்கிற சொற்களில்
கிளையுதிர்த்தவை துளிர்க்கிறது
மரமுடைய வேராக
0 கருத்துகள்:
கருத்துரையிடுக