*
அறிவுக்கும் மனதுக்குமான போட்டியில்
அறிவைத் திறக்கமுடிவதில்லை
காதும் மனதும் ஏற்படுத்தும் ஒலியில்
ஆயிரம் கூத்துகள்
ஒலியிலிருந்து ஒளியாகிப் பிரிகிறது
இருகரையும்
நம்மை நெருங்கவிடுவதில்லை
அக்கரை(றை)களின் எதிர்பார்ப்பைப் போல
ஒரு நீண்டதூரத்தைக் கடக்கும் போது
நழுவுகிற சூரியன் தைக்கிறது
முதிர்ந்த தோற்றத்தை
ஒவ்வொருமுறையும் அதற்காய்
நன்றி சொல்கிறோம்
ஓர் அணங்காடல் பிரசவிக்கிறது அண்மையை
இரண்டையும் தரிசிக்க
உங்களைத் திறங்கள்
அதுவரை
அறிவுக்கும் மனதிற்குமான போட்டியில்
அறிவைத் திறக்கவே முடிவதில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக