மெளனத்தை யார் முதலில் உடைத்தெறிவதென்ற போட்டி
பேரிரைச்சலாய் பரவுகிறது
சந்திப்பின் ஓரத்தில்
முதல் தொடுதலை உணரும் நேரம்
அத்தனை கதகதப்பானதாய் இல்லை
என்பதாய் பெய்கிற மழை
அது
திரையிடுகிறது
மனதின் அடைமழைக்கு
ஒப்பனைகளை களைக்கும் வல்லமை பெற்ற
சொல்லொன்றை முதல் துளியிலே அனுப்பிய வானம்
தேங்கிக் கிடக்கும் மழை நீரில்
முகம் பார்க்கிறது
அவரவர் மெளனத்தின் வளைவுகளில்
நீந்தப் பழகிவிட்ட மீன்குஞ்சுகள்
அடைகாக்கிற அர்த்தங்களில் வளரத் தொடங்கிவிட்டன
தொட்டி மீனின் சமுத்திரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக