அருவெறுப்பின் வாசனையில் அடைகாக்கப்படுகிறது
இருண்மையின் ஆதித் திமிர்
பதியக் காத்திருந்த தடங்களை பதியமிட்டு வளர்க்கும் ரோஜா முள் இச்சொற்கள்
புன்னகையில் அச்சுறுத்துகிற உதட்டு மடிப்பு
கோபத்தின் எரிமலைச் சீற்றம்
பொறுமையின் தூங்கு நிலை அழுத்துகையில்
விரிசலிட்டு வெளியேறுகிற நிஜம்
தீப் பிழம்பென வெடித்துக் கரைகிறது
கடலின் வாசத்தில்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக