உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

மழைச் சொற்கள்



*
அடித்துப் பெய்த பிறகும் 
இளவெயிலை எதிர்நோக்குகிற பார்வையின் குளிர்  
உறையச் செய்கிறது  மெளனங்களை


கதகதப்பு வேண்டாது
கட்டிக் கொண்ட கையில்
மழைப் புள்ளியின் மருதாணி வாசம்

சிவக்க பிடித்தும்
பறித்துக் கொடுத்த சொற்கள் செழித்து
வளர்கிற மழைக்குள்
மழையாவது பிழைத்திருக்கலாம்

0 கருத்துகள்: