*
மாறுகிறோம்
நடிப்பின் எல்லை முடிகிற அனுமதிப்பின் அவமதிப்பால்
ஆலய மணியோடு காற்றில் கலந்து வரும்
வேத வாக்காகிவிடுவதில்லை அனுமதித்த
எந்த ஒரு சொல்லும்
மாறாக அது மண்டியிடுகிறது
வெளுத்துப் போன நிஜங்களோடு
திருச்சபையாக இல்லாமல் இருந்துவிடுதல்
பொய்யை விட சாலச் சுகம்
ஆமென்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக