ஒரு ஏக்கப் பார்வைக்கா இத்தனை தூரம் அழைத்து வந்தாய்
பிறை நிலவாகிறது தனிமையின் கடல்
தேய்கிற காலங்களின் அலை திருப்பிவிடுகிறது கரை சேரா வார்த்தைகளை
கிளிஞ்சல் பொறுக்குகிற மனம் வளர்த்துப் பார்க்கிறது பெளர்ணமியை
மாடத்து விளக்கின் திரி கரியத் தொடங்கையில் சுடர்விடுகிறாய் வழக்கத்தை விட
பிரகாசமாய்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக