உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

விருப்பச் சிறையின் சர்க்கஸ் கூடாரம்




*

விரும்பி ஏற்கும் சிறைகளுக்கு  
முன் நிற்கப் பணிக்கும் காவலாளி  
கோமாளிகள்

எப்போதோ செய்த பிழையின் நிறம்  
துருத்தி நிற்கும் மூக்கின் ரத்தச் சிவப்பு

மண்டியிடுவதாய் மறுக்கப்படும் உரிமை
வெளிச்சத்திற்கு வரும் பார்வைக்குள்  
சர்க்கஸ் கூடாரம்

பிழைக்கப் போடும் வேஷம்
ரிங்க் மாஸ்டர் அசைவுக்குப் பணியும் ராஜா

அபத்தங்களைப் பூசிச்சிரிக்கும்  
அரைஜான் வாழ்வு மிச்சம் வைக்கிறது  
சிரிப்பதற்கென்று சில மனிதர்களை

0 கருத்துகள்: