*
மழைக்கு பின்னான கதகதப்பை தேடுவதாய்
மரம் விட்டு மரம் தாவுகிற குரல் கொன்றழிக்கிற பெரும் வனம் அன்பின் சிறுவிதை
கட்டுப்பாடுகளற்று காவல் நிற்கிற பச்சைய பொழுதுகள்
குடைக்காளனாய் வளர்கிறது
புழங்காச் சொல்லின் ஈரத்தில்
மாறிடும் தன்மை மாற்றத்துக்கு உள்ளாக்கப்படுவதில்
விசாரணைகள் இல்லை
நிறைந்தே இருக்கிறது முற்றம்
இன்னொரு மழைக்கான அவசியமற்று
0 கருத்துகள்:
கருத்துரையிடுக