தலைகீழாய் மாற்றிப் போடுகிற
வல்லமையோடு நுழைகிறாய்
பாவமன்னிப்புக் கூண்டில் சிதறிக் கிடக்கும்
யார் பெயரோ எழுதிய அரிசியில் உன் வழியற்ற போஜனம்
ஜோசியக் கிளியாகிற மனம் அடுக்கிக் களைக்கிறது சூதாட்ட அன்பை
சகுனியின் பகடை விரல் இப்பந்தம்
உருட்டும் லாகவம் உச்சியேற்றுகிறது சூழலை
நீ தலைகீழாய் மாற்றிப் போடுகிற
வல்லமையோடே மண்டியிடுகிறாய்
இவர்கள் அறிந்தே செய்கிறார்கள் மன்னிப்பின் மறு கன்னம் காட்டப்படுகிறது
நீயுன் பகடையை உருட்டு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக