*
காரணங்களில் சொல்லப்படும் சமாதானம்
சூரியன் கைவிட்ட பகலின் இருளாய் திரண்டிருக்கிறது
சொற்களின் மேகம் பெய்யும் கணத்தில்
கண் ஜன்னல்கள் திரையிடுவதில்லை
காட்சிகளின் மழைக்கு
அடித்துப் பெய்கிறது
அலுக்கும் நீர்க்கோடுகள் வடக்கிழுக்கும் பொழுதில்
அன்னப் பறவையின் பிரித்துப் பார்த்தலாகிறது
கிழக்கும் மேற்கும்
இனி
சமாதானத்தின் மீது யாதொரு காரணமும்
பாதிக்காத வண்ணம்
வலுக்கத் தொடங்குகிறது மழை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக