*
அழகை அத்தனை கச்சிதமாய்
அணிந்து கொள்ள முடிகிறது
முன்போல்
பொய்களின் நிறமேறிச் சிவந்திருக்கும்
உதட்டின் கரை அக்கரைப் பச்சை
தூண்டிலாவதில்லை என்ற போதும்
துடித்துச் சாகிறது சொற்கள்
துடுப்பு
முகப்பூச்சுகளுக்கு ஏற்ற அசைவாகையில்
ஒப்பனையற்ற அழகை
அத்தனை கச்சிதமாய் அணிந்துகொள்ள முடிகிறது
கரை வந்து சேர்ந்த அழகால்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக