உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

வேர்பிடித்த சொல்லின் பருவமாற்றம்



நிதானிப்பதற்குள் நிறைந்துவிடுகிறாய்
தனிமையள்ளிப் பருகும் பாத்திரம் பொத்தலிட்டுக் கிடப்பது அள்ளிப் பருகுவதின் வேகத்தைக் குறைக்கிறது
 


நீர்ப் புள்ளிகளால் வரையப்படும் கோலம் பூசணிப் பூவென மலர்கிறது தனிமையின் வனத்தில்
  


முழுக்கோலம் திருவிழாவாக்கும் கொண்டாட்டங்களில் பிடி தொலைந்த பிள்ளையின் தவிப்பாய் முனங்குகிற சொல் தேடித் திரிகிறது மடிதந்த சூட்டை



பற்றுவதாய் இல்லாத சொல்லின் கிளையில்
உதிர்கிற நம்பிக்கை
பெயர் தெரியா பறவையின் அமர்வில்
துளிர்க்கிறது
இலையுதிர்காலத்தில் வசந்தத்தை

0 கருத்துகள்: