*
அத்தனை சுகவீனங்களையும்
சரி செய்யமுடிகிற கைகளாய் இல்லை
இந்த நிதானம்
சாவகாசம் புரியும் சாகசம்
நிறுத்தும் இடம்
யாசிப்பதில்லை யாருக்குமான பசியை
வயிறு நிரம்ப பெற்றிருக்கும் கர்வம்
காட்டிக் கொடுக்கிறது
கடந்து போக வழியற்ற சுவடுகளை
திரும்புதல் குறித்து யோசிக்கும் முன்
பிடியை நன்றாய் பற்றிக் கொள்தல் அவசியம்
நிறுத்தும் இடம்
நிறைக்கப்போவதில்லை பசியை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக