உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

அதுவரை



*
சற்றேனும் விடுபட முடிந்தால் சுகம்


அச்சமூட்டுகிறது ஆளற்றது
பற்றியிருக்கும் தலையணை ஈரம்
கோடுகிழிக்கிற விடியலின் நிறத்தில்
வெளிச்சங்கள் இல்லை

கரையும் காகத்திடமும்
குரைக்கும் நாயிடமும்
உடல் சூட்டை போர்த்திக் கொண்டு தூங்கும் பூனையிடமும்
பேச மொழிகள் இல்லை
தற்போதைக்கு

கதகதப்பை கைபிடிக் குவளை கொடுக்கும் என்பதில்
நம்பிக்கை வலுவிழக்கத் தொடங்கியிருக்கிறது

மழை மேகம் காட்டிக் கொடுக்கிற திசை
நிரம்பி வழிகிற செய்திகளால்
துயரம் கசிந்து மிதக்கிறது

தழுதழுக்கச் செய்கிற அவமானத்தில்
விழுந்த பொத்தல்
கடத்திக் கொண்டு போகட்டும்
யாவற்றிலிருந்து யாவற்றையும்
 

0 கருத்துகள்: