உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

எதிர்பார்ப்பின் போதி மரம்



*
சட்டென மாறிவிடுகிற எதுவொன்றும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது முதிர்ச்சியை

எளிதாய் நடந்துவிடுவதில்லை எதுவும் இருந்தும் மனதின் சுருக்கங்கள் பாடம் படிக்கிறது ஒவ்வொரு அனுபவத்திடமும்

கைகோத்துக் கொள்கிற நம்பிக்கை துணைவருகிற தூரத்தில் கையசைக்கும் குரல் அத்தனையும் போதிமரங்கள்

இருந்தும் ஞானமடையும் புத்தனைத் தொலைக்கிறோம்
  நம் ஒவ்வொரு ஆசைக்கு நடுவிலும்..


-ரேவா

0 கருத்துகள்: