உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஒளிந்திருக்கும் சொல்லின் ஒற்றையடிப் பாதை




*

காத்திருக்க மட்டுமே தெரிந்திருக்கிற  
சொல்லைப் பற்றிக் கொண்டே நடக்கிறேன்

பிரியத்தின் கை நழுவிச் சிதறுகிற சுயத்தின் விசும்பலுக்குச் செவி சாய்க்க மறுக்கிறது

போதவில்லை உடைந்த பிம்பத்தின் உருத்தெரியா உன்மத்தம்

கை நீட்டுகிற திசை கனவாகி கால் நனைக்கையில் ஈரமற்ற நாவின் வரவிற்கு குளிர்காய்கிற வெயில் சொல்லாகிறது காத்திருப்பு

நீ வருகிறாய்..


0 கருத்துகள்: