*
ஒரு பழக்கம் மறக்கப்படும் போது
அல்லாடுகிறோம்
அது தலைவைத்துப்படுப்பதில்லை யாதொரு வசதியின் மீதும்
இருந்தும் ஆட்கொள்கிற ஆளற்ற நெருக்கடி
ஒப்படைக்கிறது உள்ளதை உள்ளபடி
மன்றாடலென இல்லாத போதும்
நம்பவைக்கிறது பிரார்த்தனைகள் பலித்ததாக
செவி நிறைகிற சிரிப்பொலிகள்
இல்லாத பொழுதுக்காய் எரிப்பதில்லை
எந்த ஒரு ஊரையும்
அதுவே
மறுக்கப்படும் போது
பரல்களாகிறது மழைத்துளி
அது
எதிரொலிக்கிறது தவளைகளின் சத்தமென
அந்த சத்தங்களோடு யாதொரு சமாதானமும்
நிகழாதவண்ணம்
பெய்யட்டும் மழை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக