*
கோடிட்ட இடங்களை நிரப்புவது போலில்லை
பொழுதுகள்
சில இடங்கள் அடிக்கோடுகள்
பல இடங்கள் கேள்விக்குறிகள்
சிலபலதில் புரியாத ஆச்சர்யக்குறிகள்
சிக்கல் காடுகள் தீர்த்துவைப்பதில்லை
பதிலுள்ள கேள்விகளை
ஆனாலும் எழுதிப்பார்க்கிறோம்
மூன்றில் ஒன்றை
ஒன்றைப் போன்ற வேறுவேறில்..
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக