ஏமாற்றம் போதுமானதாய் இருக்கிறது
திரும்பி வருவதற்கான பாதை
இந்த இருள்
வழியும் வியர்வை
உயிர் வாழ்வதற்கான விடியல்
இந்த சப்தமற்ற குடுவைக்குள்
மூச்சுக் குழாயை பொருத்தி வைத்திருக்கிறேன்
குமிழ் குமிழாய் உடையும் சொற்கள்
ஆக்ஸிஜன்
நிறுத்தி வைத்திருக்கிற நம்பிக்கை
இறங்குவதற்கான நிறுத்தம்
தூரத்தில் பெய்கிற மழைக்கு
குளிர்கிற காற்றின் கை
போதுமானதாய் இருக்கிறது இப்போதைக்கு
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக