உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

இரவுக் குறிப்புகள்





வெயில் காலக் காற்றைப் போல் இல்லை இன்றைய இந்த குளிர் காற்று..

கோடையை உறித்துத் தின்னத் தொடங்கியிருக்கும் இரவின் வியர்வையற்ற இந்த பொழுதில், நாசியேறுகிற குளிர் பனிக்கரடியைப் போல் முன் நிற்கிறது. பதுங்குவதை விடுத்து அதன் பளிங்கு கண்களை வேடிக்கைப் பார்க்கிறேன். அதன் சுவாசத்தால் என் கேசம் களைவதை பிஞ்சுச் சிறுமியின் கைகளில் அடங்க மறுக்கிற பொம்மையின் அளவைக் கொண்ட கொண்டாட்டமாகிறேன்.

கொண்டாட்டம் கொடுக்கிறது வியர்வையை, ஆனாலும் அதில் கோடையின் சுவையில்லை..

அறிந்த கசப்பில் சூடாய் தேனீர்.. குளிரில் கோடை இதமாய் இறங்குகிறது.

தொண்டைக் குழிக்குள்
பனிக்கரடி மெல்ல மெல்ல கரைகிறது...

இரவில் தேனீர் என் இன்னொரு நீ...






0 கருத்துகள்: