உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

கோடை மழை

*
வெயில் பொழுதின் மழைப் புள்ளி சொட்டு சொட்டாய் உறிஞ்சுகிறது மனதின் வெட்கையை..

இதற்காகத் தான் இத்தனைக் காத்திருப்பு.. 

கோடையில் மழை ஒரு கொண்டாட்டம்.. 

வரத் தயங்குகிற அந்த ஈரத்தில், குளிர் போர்த்தக்கிடைக்கா வெட்கை தந்தையின் அக்குள் சூடு.. அதில் பாதம் அழுந்த நடப்பதும், நம் பாதச்சுவட்டை வெயில் உறிஞ்சுவதுமான
விளையாட்டு ஒரு தேர்ந்த மேஜிக் கலைஞனின் ஜாலம்..


ஒரு புள்ளியில் தொடங்குகிற பிரம்மாண்டம் மீண்டும் மீண்டும் அடங்கா தாகம் கொண்டு விழுகிற் இடத்திலெல்லாம் முளைக்கிற அதிஅற்புதத்தில் மழைவாசம்..

வெயிலில் மழைவாசம் நுகரக்கிடைக்கா பிரிந்த காதலைப் போன்ற துயரம்.. அது நாசியில் தேக்கிவைத்திருக்கும் ஞாபகம் ஒரு அடர் போதை..
கொண்டாட்டத்தைக் கொடுத்து ஒரு கணப்பொழுதில் மீண்டும் வெயில் விரித்துக்கொண்டிருக்கும் இந்த சூரியனின் தோகை மழைக்காக நடனமிடும் மற்றொரு நாளுக்காகவும் காத்திருக்கிறேன்.. 

கொஞ்சமே பெய்தாலும் குறையில்லாது நிறைகிறது கோடைமழை..

-ரேவா

0 கருத்துகள்: