*
கைவிட்டு எண்ணக்கூடிய கணக்கின் தூரம்
அறிவிற்கு வெளிச்சமாகிறபடி பார்த்துக்கொள்கிறோம்
தொடரும் அறிவிலியின் இருட்டுக்கு
விளக்குகளிருக்க பயமெதற்கு
விளங்காப் பொருளின் மேதமையின் மீது
கல்லெறிகிற குளத்துக் கேள்விகளுக்குள்
சலனிக்கிற மெளனம்
மெளனம் மட்டும் தானா
கேள்வி எழுகிறது
வளைவுகளின் ஆதாரப் புள்ளி
வட்ட வட்டமாக சுமக்கிறது
ஒரு முடிவுறா முற்றுப்புள்ளியைத் துணையாக்கி
அது
பிரசவிக்கிற கமாக்களில் பெற்றுக்கொள்கிற யுத்த தர்மம்
நாக்கை சுழற்றுகிறது
அதுவரை
பைத்தியக்கணமென்ற உளறுதல்கள்
பேரம்பேசப்படுகிற வியாபாரச் சந்தையாக்கப்படுவதில்
தலைகுனிவிற்கு அஞ்சாத விபச்சாரம்
ரகசியங்களை விலைபேசுகிறது
மலிவுவிலையில் கைமாறும் விலை
விலைமட்டும் அல்ல
கருப்புச் சந்தைக்கு கைக்கூலியானவனின் வழித் தெரியப்போவதில்லை
நியாயம் பேசும் நீ
இங்கேயே நின்றுகொள்ளலாம்
அவர்கள் மேடையேறுகிறார்கள்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக