உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

மழைக் காலம்



நேற்றைக்கான மழை ஒரு சத்தியத்திற்கான ஒப்பந்தம். வளர்கிற சூட்டை குறைத்துக்கொள்வதைப் போன்றதொரு ஒப்பனை.. துளிகள் வண்ணங்களாய் நிலம் நனைத்த பிரியத்தின் ஹோலி..

மொட்டைமாடிச்செடிகளின் முகவாட்டத்தைப் போக்கவந்த வெயிலின் புன்னகை..

இதழ்களில் பற்றிக்கொண்டிருந்த வறட்சியின் திசைத் தப்பி பெய்த மழை நிழலை நனைக்கிறது ஆனாலும் அங்கே குளிர் வளர்கிறது. குளிரென்பது வெயிலைப் போன்றதொரு குணம்..

குணமென்பது புத்தி தெளிவினைப் போன்றதொரு நிறம்..

நேற்றைய வானம் எதிர்பாராத திருப்பம்..

வெயிலுக்கான முன்னேற்பாடுகளை உறித்துப்போட்டுக்கொண்ட பாம்பின் சட்டை, அது இன்றும் ஈரமாய் பளபளக்கிறது.. பாத வேர்களின் வழி சில்லிட்டு பாய்கிற உணர்வை பாதுக்காக்கிற இடம் இன்னொரு கிழக்கு.

அங்கே சூரியன் எழுகிறது நேற்றைய ஈரத்தை அவிழ்த்து.. கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிற மழை, வாசம் மலர்ந்து வாடிய மலரின் பிறப்பு..

மாடிச்செடிகள் சிரிக்கிறது,வெயிலைப் பார்த்து. வெயில் அதனை அணைக்கிறது தன் பூக்கரங்கள் கொண்டு..

எல்லாம் ரசிக்கப்படவேண்டியவை என்ற இடத்திலிருந்து கொண்டாடப்படவேண்டியது என்ற அறிவின் நகர்விற்கு என்னை எடுத்துவந்த நேற்றைய மழை எனக்கொரு பொக்கிஷம்..

உணர்வுகள் உருமாறும் உருவெளிக்குள் மணக்கும் மயக்கம் மழையின் விதை..

அதற்குள் வனத்தின் கொண்டாட்டம்..

நான் தொலைகிறேன்..

:)

-ரேவா

0 கருத்துகள்: