பத்திரப்படுத்துதலில் தூரமாகிவிடும் போது
கிணற்றுத் தவளையின் சத்தமென
அதிகரிக்கிறது கனவு
மீறுதலைத் தாண்டாத கோடுகள்
வனம் பூப்பெய்த ஒற்றை விதை
தாண்ட கேட்கிற குரல்
சாத்தானின் ஆப்பிள் மரம்
நாமே உண்கிறோம்
நம் நிர்வாணங்களை மறைக்க
அங்கே ஆதிக்கனவுகள்
பாம்பின் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது
நாம்
விஷமுறிவிற்கென ஒன்றிரண்டு
ஸ்மைலிக்களைப் பத்திரப்படுத்துகிறோம்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக